புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்தும் புதிய தலைமுறைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது கைப்பட அவர் எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை ஊடகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS