‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


10, +2 தனித்தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றிருந்தால் சட்டக்கல்லூரியில் சேரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அவ்வாறு சட்டம் படித்தவர்களை பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராகுல், வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

‘அரசியலமைப்பு சட்டப்படி சட்டம் பயில 10, +2, +3 என்ற வரிசையில் தான் படிப்பு அமைய வேண்டும். அதாவது சட்டம் படிக்க விரும்புபவர்கள் 10, +2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வியில் படித்த தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்க முடியாது’ என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் 700 மாணவர்கள் பயன் அடைவர்கள் என்று கூறப்படுகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS