நண்பர்களிடம் பாலியல் வன்கொடுமைக்கு மனைவியை விட்ட கொடூரக் கணவன்


திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான இரண்டே வாரத்தில் கணவனின் நண்பர்களால் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமூலையைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி வீரசாமி. இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (24) என்ற மகளும் உள்ளனர். வீராசாமியின் மகள் குமாரிக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேந்திரனுடன் (26) திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த நேற்று குமாரி பிறந்த வீட்டில் விருந்து முடித்து, புகுந்த வீடு திரும்பியுள்ளார். 

அப்போது ராஜேந்திரன் குமாரியின் நகையை வாங்கி அடமானம் வைத்து மது அருந்தியுள்ளார். பின்னர் இரவு 11 மணியளவில் குமாரியை தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பரிகளின் வீட்டிற்கு அழைத்துசென்று அங்கேயே அவரை விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குமாரி, இரவு 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அவரை விடியவிடிய தாக்கிய ராஜேந்திரன், முகத்தில் உரலாலும் அடித்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து குமாரியின் குடும்பத்திற்கு தெரியவர, அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று குமாரியை மீட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அதன்அடிப்படையில், தலைமறைவாக உள்ள கணவன் ராஜேந்திரனையும், அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS