பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறு தேர்வு: டிஎன்பிஎஸ்சி


டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வினாத்தாள் மாறிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு வரும் ‌27ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பொதுப்பணித்துறையின் ஐந்து பிரிவுகளுக்கான, 324 உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. இதில், காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் நடந்த தேர்வில், அறை எண், 14ல் மட்டும் வினாத்தாள் மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள், ஆட்சியர் அலுவலகம் சென்று முறையிட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 16 தேர்வர்களுக்கும் வரும் 27ஆம் தேதி மறுதேர்வு நடத்த, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஆட்சியர் பொன்னையா கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS