தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்


டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க பீர் விலை ரூ.10, குவாட்டர் விலை ரூ.12 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மதுபான விலையை உயர்த்தி கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், அரசு ஊழியர்களின் சம்பளம் 20 சதவீதம் வரை உயரும்.

இதனையடுத்து, மதுபான விலையேற்றத்தின் மூலம் மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதை தமிழக அரசு உணர்த்தியுள்ளதாக,  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று கூறியவர்கள் தற்போது மதுபானங்களின் விலையை உயர்த்துகிறார்கள் என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS