குல்தீப் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அபார வெற்றி


ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூர் அருகே உள்ள அலூரில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. பெங்களூர் நகரத்தில் இருந்து அலூர் கிரிக்கெட் மைதானம் 28 கி.மீட்டரில் உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ் 113 ரன்கள் எடுத்தார். இந்திய ஏ அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து விளையாடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 505 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பாரத் 106 ரன்கள் எடுத்தார். ஏ.ஆர்.ஈஸ்வரன் 86, சமர்த் 83 ரன்கள் எடுத்தனர். 

Read Also ->  கே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா

    பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 213 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ஹேண்ட்கோம்ப் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப், கே.கவுதம் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 55 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய ஏ அணி 25 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. இருப்பினும், பாவ்னே அதிரடியாக விளையாடி 28 ரன்கள் எடுக்க இந்திய அணி 6.2 ஓவரில் 55 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. 

Read Also -> சிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து 

இந்தப் போட்டியில் குல்தீப் 8 விக்கெட் சாய்த்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் சாய்த்து இருந்தார் குல்தீப். மொத்தமாக இந்த தொடரில் அவர் 12 விக்கெட் வீழ்த்தினார்.

முன்னதாக நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதால், ஆஸ்திரேலியா ஏ - இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிரா ஆனது. 

POST COMMENTS VIEW COMMENTS