கிரிக்கெட் பேட்டால் தோனிக்கு புது சிக்கல் !


ஆசிய கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

பிரபல பேட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோருடன் பேட்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜலந்தரை சேர்ந்த பிஸ்னஸ்மேன் குணால் ஷர்மாதான் ஸ்பார்டன் நிறுவனத்தின் உரிமையாளர். அதே சமயம் ஸ்பார்டன் நிறுவனத்தின் இணை உரிமையாளரே தோனி தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்பார்டன் நிறுவனம் வீரர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உரிய நேரத்தில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணிக்கான கேப்டன் இயான் மார்கன் ஸ்பார்டன் நிறுவன பேட்களையே பயன்படுத்தி வருகிறார். ஆனால் அதற்கு அந்நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையை இன்னும் செலுத்தவில்லை. அதேபோல மிட்செல் ஜான்சன், ஜோ பர்ன்ஸ், கிறிஸ் கெய்ல், கமின் கான் ஆகியோரும் ஸ்பார்டன் நிறுவன பேட்களையே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சரியான நேரத்தில் தொகை அவர்களுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

வீரர்களுக்கான பணப் பிரச்னை தொடரும் நிலையில் தோனி இன்னும் தான் பயன்படுத்தும் பேட்களில் ஸ்பார்டன் நிறுவன ஸ்டிக்கரையே ஒட்டியுள்ளார். ஏற்கெனவே நிறுவனத்தின் இணை உரிமையாளரே தோனி தான் என கருத்து கூறப்படும் நிலையில் தற்போது பணப் பிரச்னை எழுந்துள்ள நிலையிலும் தோனி  இன்னும் ஸ்டார்பன் நிறுவனத்திற்கு ஆதரவாக அந்த ஸ்டிக்கரை பயன்படுத்துவது அவருக்கு ஒரு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS