நடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்


அமெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டத்திற்கான போட்டியில் செரினாவின் ஆட்டத்தில் மட்டுமல்ல வார்த்தைகளிலும் அனல் வீசியது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனை செரினா வில்லியம்ஸை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா வெற்றி பெற்றார். போட்டியின் போது செரினாவுக்கு எதிராக புள்ளி ஒன்றை வழங்கியதால் ஆத்திரமடைந்த அவர், நடுவர் செர்ஜியோ ரமோஸை கடுமையாக சாடினார். நடுவரிடம் சென்று முறையிட்ட செரினா பின்னர் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். முதலில் நடுவரை திருடன் என அவர் திட்டினார். இதற்கு மன்னிப்பு கோருமாறு நடுவர் வலியுறுத்தினார். 

அதற்கு மறுத்த செரினா தமது நடத்தையை நடுவர் தவறாக சித்தரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார். தாம் விளையாடும் எந்தப் போட்டியிலும் ரமோஸ் நடுவராக இருக்கக் கூடாது என்றும், அவர் ஒரு பொய்யர் என்றும் திட்டினார். தவறான வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் செரினா தெரிவித்தார். இவ்வாறு வார்த்தை மோதல் நடத்தியது, மட்டையை தூக்கி எறிந்தது உள்ளிட்ட பிரச்னைகளுக்காக நடுவரால் செரினா மூன்று முறை எச்சரிக்கப்பட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS