குக் கனவு அணியில் சச்சினுக்கு கூட இடமில்லையா?


கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு பெற்ற வீரர்கள் பலர் தங்களது கனவு அணியை, அதாவது ஆல் டைம் லெவன் அணியை வெளியிடுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான அலஸ்டர் குக் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார். இந்திய அணி உடனான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக குக் அறிவித்துள்ள நிலையில், இந்த ஆல் டைம் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். தனது ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

குக் வெளியிட்டுள்ள ஆல் டைம் லெவன் அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. குக் வெளியிட்டுள்ள அணியில், ஆஸ்திரேலிய வீரர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளில் இருந்து தலா இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.

குக்கின் ஆல் டைம் லெவன் அணி:

1. கிரஹாம் கூச் (இங்கிலாந்து)


2 மேத்யு ஹைடன் (ஆஸி.)


3. பிரைன் லாரா (மே.தீவுகள்)


4. ரிக்கி பாண்டிங் (ஆஸி.)


5. டிவில்லியர்ஸ் (தெ.ஆப்பிரிக்கா)


6. குமார சங்ககாரா (இலங்கை)


7. ஜேக் காலிஸ் (தெ.ஆப்பிரிக்கா)


8. முத்தையா முரளிதரன் (இலங்கை)


9. ஷேன் வார்னே (ஆஸி.)


10. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)


11. கிளென் மெக்ரத் (ஆஸி.)

POST COMMENTS VIEW COMMENTS