தோனி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளிய விராட் - எத்தனை மைல்கல் !


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தொடரில் 2 சதம், 3 அரைசதங்கள் என மொத்தம் 544 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 68 ரன். இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவிர்த்து மீதமுள்ள 3 போட்டிகளிலும் கோலி முத்திரை பதித்தார். 

          

நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்த நிலையில், ஒரு கேப்டனாக டெஸ்டில் 4000 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை முதல் இந்திய வீரராக 4000 ரன்கள் அடித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். விராட் கோலிக்கு முன்பாக, முன்னாள் கேப்டன் தோனி 3454 ரன்கள் எடுத்தே அதிகபட்சமாக இருந்தது. தற்போது விராட் கோலி தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். தோனி கேப்டனாக 60 போட்டிகளில் விளையாடி 5 சதம், 24 அரை சதங்கள் அடித்துள்ளார். விராட், தோனியை அடுத்து கவாஸ்வர் கேப்டனாக டெஸ்டில் 3449 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.  

              

அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 1500 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 2535 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார். கவாஸ்கர் 2483, ராகுல் டிராவிட் 1950, குண்டப்ப விஸ்வநாத் 1880 மற்றும் திலிப் வெங்க்சர்கார் 1589 ரன்களும் எடுத்து முதல் 5 இடங்களில் உள்ளனர். 

                 

வெளிநாட்டு மண்ணில் அடுத்த ரன் அடித்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1693 ரன்களுடன் அந்த இடத்தில் இருந்தார். 28 டெஸ்ட் போட்டிகளில் சவுரவ் கங்குல் எட்டிய இந்த இடத்தை விராட் கோலி வெறும் 19 போட்டிகளில் அடைந்துள்ளார். 30 போட்டிகளில் வெளிநாடுகளில் விளையாடிய தோனி 1591 ரன்கள் எடுத்துள்ளார். முகமது அசாருதீன் 27 டெஸ்டில் 1517 ரன்கள் எடுத்தார். ராகுல் டிராவிட் 17 போட்டிகளில் 1219 ரன்கள் எடுத்தார். 

            

அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸின் கேரி சோப்பர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் 722 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS