முகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ!


ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டியை தொடர்ந்து, அதிகார பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முகமது சிராஜின் பந்துவீச்சில் திணறியது.

முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சதமடித்தார். அவர் 127 ரன்கள் எடுத்தார். மார்னஸ் லபுஸ்செக்னே 60 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 19.3 ஓவர்கள் வீசி 59 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். 

இதையத்து இந்திய ஏ அணி ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ரவிகுமார் சமர்த் 10 ரன்களுடனும் மயங்க் அகர்வால் 30 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS