சானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்!


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர், முறை தவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர், கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானிடம் நடந்ததா கக் கூறி சோயிப் மாலிக், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 4 வருடத்துக்கு முன் என் மனைவி சானியா மிர்சாவுடன் பங்களாதேஷில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது சபீர் ரஹ்மான் எனது மனைவியிடம் முறைதவறி நடக்க முயன்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் இதுபற்றி  பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

 பங்களாதேஷ் வீரர் சபீர் ரஹ்மானுக்கும் சர்ச்சைக்கும் அவ்வளவு பொருத்தம். 26 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர் ஒருவ ரை தாக்கியதாக எழுந்த புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

பிறகு பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டதால், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது, அனுமதியின்றி பெண் ஒருவரை ஓட்டலுக்கு அழைத்துவந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்காக அவரு டைய ஒப்பந்தம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில்,ரசிகரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் அவருக்கு நேற்றுதான் 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சோயிப் மாலிக் தெரிவித்துள்ள இந்த புகார் நிரூபிக்கப்பட்டால், சபீருக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள்கால தடைவிதிக்கப் படலாம் என்று தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS