ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் கூறியுள்ளார். புதியதலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு அவர் கூறினார். 

                    

இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில்  தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்வுக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

                          

இந்நிலையில், ஆரோக்கிய ராஜிவ் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் வெள்ளிப் பதக்கம் வென்று தந்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த லட்சியம் ஒலிம்பிக். அதற்காக கண்டிப்பாக சிறப்பாக பயிற்சி செய்வேன்” என்று கூறியுள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS