28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்


நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். பெர்ஸ்டோவ் 4 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

   

இதனால், இங்கிலாந்து அணி 28 ரன்னில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. பும்ரா இரண்டு விக்கெட்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3வது பந்துவீச்சாளராக சமிக்கு பதிலாக பாண்ட்யாவை கேப்டன் விராட் கோலி அழைத்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS