என்ன செய்யப் போகிறது இந்திய அணி ?


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நாளை இன்று தொடங்குகிறது.

Read Also -> ஒரே நாளில் இரண்டு தங்கம் ! ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்படுவார் என தெரிகிறது. இந்த ஒரு மாற்றத்தை தவிர இந்திய அணியில் வேறு மாற்றங்கள் ஏதும் இருக்காது எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பந்து வீச்சில் பலமாக இருக்கிறது. மேலும் பேட்ஸ்மேன்களும் கடந்த டெஸ்ட் போட்டியில் ஓரளவு தேறிவிட்டனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் தவானும், ராகுலும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

Read Also -> என்ன செய்யப் போகிறது இந்திய அணி ?

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. பந்துவீச்சில் மாற்றங்கள் பெரியளவில் இருக்காது. ஆனால் பேட்டிங் வரிசையில் நிச்சயம் மாற்றம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் அனுபவம் மிக்க பேட்ஸ்மேனான அலிஸ்டர் குக் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதேபோல போப், ஜென்னிங்ஸ் ஆகியோரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை. இதனால் இவர்களுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர்கள் களமிறக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சாதனை செய்ய காத்திருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 36 வயதான ஆண்டர்சன் இதுவரை 141 டெஸ்ட் போட்டிகளில், 264 இன்னிங்ஸில் விளையாடி 557 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் 7 விக்கெட் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் சாதனையை முறியடிப்பார்.

Read Also -> அசத்திய இந்திய இளம்படை... சாம்பியனானது இந்தியா 'பி' !  

மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில், 243 இன்னிங்ஸில் விளையாடி 563 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுபோன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று தொடங்குகிறது 4 ஆவது டெஸ்ட். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

POST COMMENTS VIEW COMMENTS