4வது டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் ஆண்டர்சன்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைக்க காத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

Read Also -> 4-வது டெஸ்ட்: அஸ்வின் டவுட், ஜடேஜாவுக்கு வாய்ப்பு! 

நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுதாம்டனில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சாதனை செய்ய காத்திருக்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 36 வயதான ஆண்டர்சன் இதுவரை 141 டெஸ்ட் போட்டிகளில், 264 இன்னிங்ஸில் விளையாடி 557 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் 7 விக்கெட் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் சாதனையை முறியடிப்பார். மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில், 243 இன்னிங்ஸில் விளையாடி 563 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Also Read -> ஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் ! தங்கங்களை பறிகொடுத்த இந்தியா 

நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைக்காவிட்டாலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சாதனையை நிகழ்த்துவார் என்று தெரிகிறது.

தனது சாதனையை ஆண்டர்சன் முறியடிக்க இருப்பது பற்றி மெக்ராத் கூறும்போது, ’ஆண்டர்சன் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. அவருக்கு வாழ்த்துக்கள். என் சாதனையை அவர் கடந்து விட்டால் அவரை முறியடிக்க யாராலும் முடியாது என்று நினைக்கிறேன்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமைதான். ஆனால் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியதுதான்’ என்றார்.  

 
 

POST COMMENTS VIEW COMMENTS