கெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர் 


கெட்டில் பெல் விளையாட்டில் ஆசிய அளவில் தங்கம் வென்றுள்ளார் தமிழக வீரர் சுதர்சன். 

சுதர்சன் இளம் வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டதால், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தனது கல்லூரி நாட்களில் உடற்பயிற்சியில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அறிந்து தீவிரமான பயிற்சியை மேற்கொண்டார்.

இதன்மூலம் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தனது கல்லூரி சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். பின்பு உடற் பயிற்சி ஆலோசகராக பணிபுரிந்து இவர் கெட்டில் பெல் விளையாட்டை பற்றி அறிந்து இத்துறையில் ஆர்வம் காட்டி இருக்கிறார்.

இந்நிலையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கெட்டில்பெல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அங்கு நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ‘" The Absolute Winner’என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார்.


 

POST COMMENTS VIEW COMMENTS