தங்க மங்கை வினேஷூக்கு ஏர்ப்போட்டில் நடந்த நிச்சயதார்த்தம்!


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் மல்யுத்த பிரிவில் தங்கம் வென்ற வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்தியாவைச் சேரந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர், ஜகர்தாவில் இப்போது நடந்து வரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட் டியில் கலந்துகொண்டார். இதில், பெண்கள் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில், ஜப்பானின் யூகி இரியை இறுதிப் போட் டியில் எதிர்கொண்டார்.

Read Also -> அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆப்கான் வெற்றி! 

இந்தப் போட்டியின், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் இறுதியில், யூகியை தோற் கடித்து தங்கம் வென்றார்.  இதன்மூலம், ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள் ளார் வினேஷ் போகத்.

Read Also -> 8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல்  

இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் நாடு திரும்பினார். அப்போது டெல்லி விமான நிலையத்தில் அவரது நீண்ட நாள் நண்பரான சோம்வீர் ரதியுடன், வினேஷ் போகத்துக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS