வெள்ளி வென்றார் தமிழக வீரர் தருண் அய்யாசாமி: மோடி வாழ்த்து 


ஆசிய விளையாட்டு போட்டியின் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்.

இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9வது நாளான இன்று, 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 48.96 நொடிகளில் இரண்டாவதாக இலக்கை எட்டி வெள்ளி வென்றார் தருண் அய்யாசாமி.  

அதேபோல், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 3000 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 3000 மீட்டர் தூரத்தை 9.40 நிமிடங்களில் கடந்தார் சுதா சிங். 

       

இந்தியா இதுவரை 7 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 40 பதக்கங்களுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. 84 தங்கம் உட்பட 165 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

         

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் அய்யாசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS