வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு 


ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் மூவருக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சவரவ் கோஷல், தீபிகா கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகிய ஸ்குவாஷ் வீரர்-வீராங்கனைகள் வெண்கலப்பதக்கம் வென்றனர். 

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தீபிகா, ஜோஸ்னா ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து நான்காவது முறையாக பதக்கம் வென்றுள்ள சவ்ரவ் கோஷலையும் முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

மூவரையும் தனித்தனி அறிக்கைகள் வாயிலாக வாழ்த்தியுள்ள முதலமைச்சர், மூவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS