ஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து


ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. இங்கு நடந்த பேட்மின்டன் போட்டியில் மகளிர் அரையிறுதி பிரிவில் பிவி. சிந்து, ஜப்பானின் அகனே யமகுஜி (Akane Yamaguchi)யுடன் மோதினார். இந்த போட்டியில், 21-17,15-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்றார். 65 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

Read Also -> 157 ரன்னுக்கு சுருண்டது இந்திய ஏ, பாண்டே சதத்தால் நிமிர்ந்தது இந்திய பி!  

Read Also -> தடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்!  

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரங்கனை ஒருவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் முறை. இறுதிப்போட்டியில், முதல் நிலை வீராங்கனையான டை சூ யிங்-கை அவர் சந்திக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS