இரட்டை சதத்துடன், 8 விக்கெட்: அழைப்புக்கு காத்திருக்கிறார் அசத்திய மொயின்!


கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து மிரட்டிய மொயின் அலி, இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்று காத்திரு க்கிறார்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. பெரும்பாலும் சுழல்பந்துவீச்சுக்கு அவரை பயன்படுத்தி வருகிறது இங்கிலாந்து கிரிக் கெட் அணி. இப்போது இந்திய அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் மொயின் அலியை ஓரங்கட்டிவிட்டு, அடில் ரஷீத்துக்கு வாய்ப்பளித்து வருகிறது. ஒரு சுழல் பந்துவீச்சாளரோடு களமிறங்குவதால் மொயின் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் இடம்பிடித்திருந்தாலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினார் மொயின் அலி. வொர்சஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய அவர், யார்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்த மொயின் அலி (219 ரன்கள்) 8 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதையடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் தனக்கு அழைப்பு வரும் எனக் காத்திருக் கிறார்.

‘இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என நம்புகிறேன். அழைத்தால் மகிழ்வேன். இல்லை என்றால் பரவாயில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பேன். அணியில் இருக்கிற அனைவருமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். தொடர்ந்து ஆட்டத்திறனை மேம்படுத்தும் பயிற்சியில் ஈடுபடுகிறேன்’ என்கிறார் மொயின் அலி. 
 

POST COMMENTS VIEW COMMENTS