4வது டெஸ்டில் கோலி இதனை நிச்சயம் செய்வார் - கணிக்கிறார் மைக்கேல் வாஹன்


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனியொரு நட்சத்திரமாக கேப்டன் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். சளைக்காமல் ரன் குவித்து எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், முதல் போட்டியில் விராட் கோலி அடித்த 149 ரன்கள் தான் ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரகானே, புஜாரா எல்லோரும் தங்கள் பங்களிப்பு ரன்கள் அடித்தாலும், விராட் கோலி வழக்கம் போல் எல்லோரையும் தாண்டி முத்திரை பதித்தார். 

இந்தத் தொடரில் விராட் கோலி இதுவரை 440 ரன்கள் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 149, 51 என மொத்தம் 200 ரன்கள் எடுத்தார். அதேபோல், மூன்றாவது டெஸ்டில் 97, 103 என மொத்தம் 200 ரன் எடுத்தார். 6 இன்னிங்ஸில் சேர்த்து மொத்தம் 73.33 பேட்டிங் சராசரி. விராட் கோலிக்கு அடுத்து பேர்ஸ்டோவ் அடித்த 206 ரன் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனிடம் ட்விட்டரில், நான்காவது டெஸ்டில் விராட் கோலி சதம் அடிப்பாரா என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு மைக்கேல் வாஹன், “highly likely” என்று எளிமையாக பதில் அளித்துள்ளார். அதாவது அதிகமாகவே வாய்ப்புள்ளது என்று வாஹன் கணித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS