இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் - குண்டு எறிதலில் தூர் அசத்தல்


இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் சிங் தூர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.  

23 வயதான தஜிந்தர் தனது முதல் முயற்சியிலேயே 20.75 மீட்டர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் சீன வீரர் லியு யங், கஜகஸ்தான் வீரர் இவான் இவனோவ் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். 

                   

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு இது 7-வது தங்கம் ஆகும். மேலும் இந்தியா 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது. சீனா 72 தங்கங்களுடன் முதல் இடத்தில் தொடர்கிறது. 


Asian Games 2018: India's Tajinderpal Singh Toor wins gold in Men's shot put, sets new Asiad record

POST COMMENTS VIEW COMMENTS