‘அழகான பையன்’  கொஞ்சி விளையாடிய விராட் - அனுஷ்கா ஜோடி 


4 வருடங்களாக காதலித்து வந்த விராட்-அனுஷ்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பில் இருந்தே இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு சென்று பார்த்து வருகிறார். அதேபோல், இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது அவர் உடனே செல்வார். அப்பொழுதெல்லாம், விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்த செய்திகளும் வலம் வரும்.

                

அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும் அனுஷ்கா - விராட் கோலி இருவருக்கும் இடையிலான ரொமான்ஸ் தொடர்ந்து வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போதும் அனுஷ்கா சர்மா, கணவர் விராட் கோலிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலானது. அதேபோல், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி சதம் அடித்த உடன் கேலரியில் இருந்த அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். பதிலுக்கு அனுஷ்காவும் கிஸ் கொடுத்தார். 

     

முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவை புகழ்ந்து தள்ளினார். தன்னை எப்பொழுதும் அனுஷ்கா தான் உற்சாகப்படுத்தி வருவதாக கூறினார்.

இந்நிலையில், கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவுடன் இருப்பதுபோல் ஒருபடத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் விராட் - அனுஷ்காவுடன் ஒரு நாயும் உள்ளது. அந்த நாயை அனுஷ்கா தனது கைகளால் வருடி விடுவதுபோல் படம் உள்ளது. படத்துடன், “ஒரு அழகான பையனை பார்த்தோம். நாங்கள் ஒரு போட்டோ எடுக்கும் வரை அவ்வளவு பொருமையாக இருந்தது” என்று குறிப்பிட்டு இருந்தார் விராட்.

    

விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரும் நாய்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்கள்.

இதேபோல் தங்களது சமூக வலைதள பக்கங்களில் நாய்களுடன் உள்ளவாறு பல படங்களை பதிவிட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS