நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ’தல’ தோனி!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாய்களுக்கு பந்துகளை வீசிப் பயிற்சி அளிக்கும் விடியோ வைரலாகி வருகிறது.
  
இந்தியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர், தனது ஜார்க்கண்டில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக விரைவில் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார். 

இதற்கிடையே, தனது பண்ணை வீட்டில் வளர்ப்பு நாய்களுடன் அவர் விளையாடி மகிழ்ந்தார். டென்னிஸ் பந்துகளை அவர் வீச, நாய்கள் அதை லாவகமாகப் பிடித்து, கவ்வி கொண்டு வருகின்றன. பின்னர் அவற்றை வருடி கொடுக்கிறார் தோனி. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளார். 

அதில், ’கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி. அதிகளவிலான அன்பு கிடைப்பது விலைமதிப்பில்லாத ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

POST COMMENTS VIEW COMMENTS