ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6-வது தங்கம்!


ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கம் வென்றது. இதையடுத்து இந்தியா 6 தங்கப்பதங்களை வென்றுள்ளது.

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப்போட்டியில் கஜகஸ்தான் அணியை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கமாகும்.

(ஹீனா சித்து)

அதுபோல், பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியா தற்போது வரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை பெற்றுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS