மீண்டு வந்த கோலி மீண்டும் முதலிடம்


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரநிலைப்பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை வென்ற இந்தியா, ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. இதையடுத்து தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியக் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தாலும், அணி போராடித் தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணியும், படுதோல்வி அடைந்தது. இதற்கிடையே டெஸ்ட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலிடத்தை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பிடித்தார். 

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது பகிரங்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 97 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களும் குவித்தார். இந்திய அணியும் போட்டியை வென்றது. விராட் கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தால் 937 புள்ளிகளுடன் அவர் மீண்டும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டு 929 புள்ளிகளுடன் ஸ்டீவன் ஸ்மித்தும், 3வது இடத்தில் 849 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் உள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS