இந்தியாவுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம்


ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை ராகி சர்னோபத் தங்கம் பதக்கம் வென்றார். 

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில் களைகட்டி வருகின்றன. மகளிர்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு தாய்லாந்து வீராங்கனையின் சவாலை முறியடித்து இந்திய வீராங்கனை ராகி சர்னோபத் தங்கம் வென்றார்.

இந்தப் பிரிவில் தகுதிச் சுற்றில் முதலிடத்தில் இருந்த மனு பாக்கர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 4ஆவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. மேலும் இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் 2 வது தங்கப்பதக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

POST COMMENTS VIEW COMMENTS