வரலாற்று சாதனையை முறியடித்தது இந்திய அணி


இந்திய ஹாக்கி அணி ஒரே போட்டியில் 26 கோல்கள்‌ அடித்து 86 ஆண்டுகால சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளது.

Read Also -> பட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..!  

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் களைகட்டி வருகின்றன. செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 26 கோல்கள் அடித்தது. இத்தகைய வரலாற்று சாதனையை இந்திய அணி நிகழ்த்தியதன் மூலம் 86 ஆண்டுகளுகள் இருந்து வந்த சாதனையை முறியடித்துள்ளது.

Read Also -> 10 நிமிடங்களில் வீழ்ந்தது கடைசி விக்கெட் - இந்திய அணி அபார வெற்றி 

1932-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான்சந்த் தலைமையிலான இந்திய அணி, அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 24 கோல்கள் அடித்திருந்தது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள 43 கோல்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS