இம்ரான் கானுடன் மோதல்: பதவி விலகினார் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்!


பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தவர் நஜம் சேத்தி. 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாஸ் ஷரிப் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அப்போது 35 தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு நஜம் சேத்தி துணையாக இருந்தார் என்றும் இம்ரான் கான் குற்றச்சாட்டுக்களை கூறினார். இதை மறுத்த சேத்தி, இம்ரான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து இருவரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இவரை நியமித்தார். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், வாரிய உறுப்பினர்கள் இவரை 2020-ம் ஆண்டு வரை மீண்டும் தலைவராக தேர்வு செய்தனர்.

இந்நிலையில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றதை அடுத்து தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் நஜம் சேத்தி. அதை ஏற்றுக்கொண்ட இம்ரான் கான், புதிய தலைவராக எஹசன் மணியை நியமித்துள்ளார்.

(எஹசன் மணி)

மணி, ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல பொறுப்புகளை கவனைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS