டெஸ்டில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவக்கிய ரிஷப்


இந்திய வீரர் ரிஷப் பண்ட் தனது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவக்கியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று தொடங்கியது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளிலும் 0, 20, 1, 0 என ரன் எடுத்துள்ள அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அறிமுக வீரராகச் சேர்க்கப்பட்டார். விராட் கோலி, ரகானேவின் சிறப்பாக ஆட்டத்தால் இந்திய அணி 250 ரன்களை கடந்தது. ரகானே 81, கோலி 97 ரன்னில் ஆட்டமிழந்தனர். 

கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்ததும் 6வது விக்கெட்க்கு ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 12வது வீரராக சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவங்கியுள்ளார் பண்ட். இந்திய அணி 84 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. 

இதற்கு முன்பாக சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவக்கியவர்கள்:-

எரிக் ப்ரீமேன் (ஆஸ்திரேலியா-1968), 
கர்லிஸ்லே (வெஸ்ட் இண்டீஸ்-1986), 
கெய்த் டபெக்வா (ஜிம்பாப்வே-2005), 
டேல் ரிச்சர்டு (வெஸ்ட் இண்டீஸ்-2009), 
ஷபியுல் இஸ்லாம் (வங்கதேசம்-2010), 
ஜஹுருல் இஸ்லாம் (வங்கதேசம்-2010), 
அல்-அமின் ஹொசைன் (வங்கதேசம்-2014), 
மார்க் கிரெய்க் (நியூசிலாந்து-2014), 
தனஞ்ஜெயா டி சில்வா (இலங்கை-2016), 
கம்ருல் இஸ்லாம் ரப்பி (வங்கதேசம்-2016), 
சுனில் அம்பிரிஸ் (வெஸ்ட் இண்டீஸ்-2017) 

POST COMMENTS VIEW COMMENTS