3 ரன்னில் சதத்தை தவறவிட்ட விராட் கோலி..!


நாட்டிங்காமில் இன்று தொடங்கியுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் குல்தீப், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். 

கடந்த போட்டிகளைப் போல் அல்லாமல் தொடக்கத்திலேயே விக்கெட்கள் விழாமல் இருவரும் நிதானமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்தது. 60 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகர் தவான்(35) வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தவானை அடுத்து கே.எல்.ராகுல் 23, புஜாரா 14 என அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 82 ரன்களுக்குள் 3வது விக்கெட்டையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணியின் வோக்ஸ் 3 விக்கெட்களையும் சாய்த்தார். இதனால், கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போல் இந்தப் போட்டியிலும் இந்திய அணி எளிதில் சுருண்டுவிடும் என்று ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்டது.

               

இந்நிலையில்தான், விராட் கோலியும், ரகானேவும் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானகாக விளையாடினாலும் அவ்வவ்போது பவுண்டரிகளை அடிக்கவும் தவறவில்லை. முதலில் விராட் கோலியை காட்டிலும் ரகானே தான் வேகமாக ரன் சேர்த்தார். ஆனால், பின்னால் விராட் கோலி தான் முதலில் அரைசதம் அடித்தார். விராட் கோலி 74 பந்திலும், அவரை தொடர்ந்து ரகானே 76 பந்திலும் அரைசதம் அடித்தனர். இதனால், 41.3 ஓவரில் 150 ரன், 59 ஓவரில் 200 ரன்களையும் இந்திய அணி எட்டியது. 

                  

இந்திய அணி 241 ரன்கள் எடுத்திருந்த போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகானே 81 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட்-ரகானே ஜோடியை பிராட் பிரித்தார். 71 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. 82 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில், இந்திய அணியை விராட்-ரகானே  ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, விராட் கோலியுடன், ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய கோலி சதத்தை நெருங்கினார். இதனால், அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், 97 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்ததை அடுத்து, ரிஷப் பண்ட் களமிறங்கினார்.  80 ஓவர்கள் முடிவில் இந்திய 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.  பாண்ட்யா 14, பண்ட் 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS