அணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’!


காயம் காரணமாக, தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்த தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட த்ரிஷா செட்டி, அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் த்ரிஷா ஷெட்டி. கீப்பிங்கில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இந்த த்ரிஷா, மகளிர் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை! இவர், தமிழ்ப் பெண் என்பது
குறிப்பிடத்தக்கது.

 தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தோள்பட்டை காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. அதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட த்ரிஷா, ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுக்கிறது. அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்கும் இந்த போட்டிக்கான வீராங்கனைகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் த்ரிஷா ஷெட்டியும் இடம்பிடித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS