மீண்டும் ’யோ யோ’ மிரட்டல்: கிலியில் கிரிக்கெட் வீரர்கள்!


இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஜூன் 5-ம் தேதியில் இருந்து 10 வரை பிட்னஸ் டெஸ்ட் நடக்க இருக்கிறது. இதில் ‘யோ யோ; உடல் தகுதி டெஸ்ட் கட்டாயம் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பயத்தில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. அங்கு 3 டி20 தொடர், 3 ஒரு நாள் போட்டி,  5 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு  விளையாடு கிறது. அதற்கு முன்பாக, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. ஜூன் 27 மற்றும் 29-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடக்கிறது. 

இதற்காக, டி20 அணி, ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கச் செல்லும் இந்திய ’ஏ’ அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னணி வீரர்கள் தவிர ஏராளமான இளம் வீரர்களும் இதில் இருக்கிறார்கள்.

சுமார் 40 வீரர்களுக்கு, வரும் 5-ம் தேதியில் இருந்து 10 வரை பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஃபிட்னஸ் டெஸ்ட் நடக்கிறது. இதில் யோ யோ உடற்தகுதி டெஸ்ட் கட்டாயம்!

இதில் தேர்வு பெறும் வீரர்கள் மட்டுமே அணியில் இடம்பிடிப்பார்கள். இந்த டெஸ்ட்டில் தேர்வு பெறாததால் மூத்த வீரர்களான சுரேஷ் ரெய் னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து ஓரங்கப்பட்டிருந்தனர். இரண்டு மூன்று முறை இந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்த யுவராஜ் சிங், கடந்த சில மாதங்களுக்கு முன் இதில் தேர்வானார்.

சுரேஷ் ரெய்னாவும் தேர்வு பெற்று, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். யுவராஜ் சிங் உடல் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டாலும் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த ’யோ யோ’ டெஸ்ட் முக்கியம் என்பதால் இதில் தேர்வு பெறுவதற்காகக் கடுமையா ன பயிற்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS