சாதனை தமிழர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த புதிய தலைமுறை..!


சாதனை தமிழர்களை பாராட்டும் விதமாக 6 பிரிவுகளில் 12 பேருக்கு தமிழன் விருதுகள் வழங்கி புதிய தலைமுறை தொலைக்காட்சி கௌரவித்தது.

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த சாதனை தமிழர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து ‌விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது புதியதலைமுறை. அந்த வகையில் ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டு தமிழன் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. தமிழ் இலக்கியம், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, சமூகசேவை, கலை ஆகிய 6 துறைகளில் வாழ்நாள் சாதனையாளர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் என இருபிரிவுகளில் 12 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த வண்ணமயமான விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் இலக்கியம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - சிற்பி பாலசுப்பிரமணியம்
நம்பிக்கை நட்சத்திரம் விருது - யுகபாரதி

தொழில்

வாழ்நாள் சாதனையாளர் விருது- நாகராஜ்
நம்பிக்கை நட்சத்திரம் விருது- சிபிச் செல்வன்

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ரமணன்
நம்பிக்கை நட்சத்திரம் விருது- மாஷா நசீம்

விளையாட்டு

வாழ்நாள் சாதனையாளர் விருது - தர்மராஜ் சேரலாதன்
நம்பிக்கை நட்சத்திரம் விருது- பிரக்ஞானந்தா

சமூகசேவை

வாழ்நாள் சாதனையாளர் விருது- ரங்கநாயகி
நம்பிக்கை நட்சத்திரம் விருது- பகவான்

கலை

வாழ்நாள் சாதனையாளர் விருது-  மணிரத்னம்
நம்பிக்கை நட்சத்திரம் விருது-  சந்தோஷ் நாராயணன்

POST COMMENTS VIEW COMMENTS