இது உலக நடிப்புடா சாமி ! நடிகர் திலகம் நெய்மர் ! கலகலக்கும் மீம்ஸ்


பிரேசில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர். காகா, ரொனால்டோ, ரொனால்டீனா வரிசையில் உலகளவில் பிரேசிலில் இருந்து உலக கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வீரர்களில் நெய்மர் மிக முக்கியமானவர்.

ஆனால் நெய்மர் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. விளையாடும் போது அடிப்பட்டுவிட்டால் நெய்மர் அளவுக்கு மீறி துடிதுடித்து மைதானத்தில் கதறி அழுவார்.

இப்படித்தான் நாக் அவுட் சுற்றுப் போட்டியில் மெக்சிகோவை சந்தித்தது பிரேசில். இந்தப் போட்டியில் மெக்சிகோ வீரருடன் மோதி கீழே விழுந்த நெய்மர் கதறி கதறி அழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதைக் கண்ட எதிர் அணி வீரர்களும், கோச்சும் என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறிப்போயினர். எனினும் நெய்மரின் இந்த செயல் ரொம்ப ஓவரா இருக்குனு சமூக வலைதளங்களில், கால்பந்து உலகிலும் பெரும் விமர்சனம் ஏற்பட்டது.

இதனையடுத்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் முதல் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் வரை அனைவரும் நெய்மரை வறுத்தெடுத்து வருகின்றனர். உலக ரசிகர்கள் நெய்மருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்றும், நம் தமிழ் ரசிகர்கள் நெய்மரை நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒப்பிட்டும் வருகின்றனர்.

மேலும், இதற்கு உதாரணமாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியின் கையில் கத்திப் பட்டதும் அவர் கீழே புரண்டு அழுவார். அந்தக் காட்சியையும் நெய்மர் புரளும் காட்சியையும் வைத்து மீம்மாக்கி வருகிறார்கள்.

இதற்கென மீம் கிரியேட்டர்கள் தனி பக்கங்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி வைரலாக்கி வருகிறார்கள். நெய்மருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பிரஞ்ச், இதாலி மொழிகளில் கூட மீம்கள் உலா வருகின்றன.

ஆனால் இதையெல்லாம் நெய்மர் பொருட்படுத்தாமல் அடுத்த காலிறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நெய்மர் மைதானத்தில் துடிப்பதும் பெரிதல்ல, அடுத்தப் போட்டியிலும் துடிப்பார். மீம்களும் பறக்கும், இதுக்குலாம் "எண்டே" கிடையாது.
 

POST COMMENTS VIEW COMMENTS