காலாவை டவுன்லோட் செய்வது எப்படி ? தேடும் தமிழகம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் காலா. ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினி மும்பை தாராவியில் மக்களுக்காக போராடும் ஒருவராக நடித்திருக்கிறார். இந்நிலையில் வெளிநாடுகளில் காலா திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் காலாவுக்கு செல்வதை புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர். 

கூகுளில் மக்கள் காலா குறித்து என்ன தேடுகிறார்கள் என அறிந்து கொள்ள முயன்ற போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுக்க காலா படம் குறித்து எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் காலா ரிவியூவ் (Kaala Review) என்ற பதத்தை பயன்படுத்தியும், கர்நாடகாவில் ரிலீஸ் ஆகிறதா என்பதையும் தேடி இருக்கின்றனர். கபாலி படம் எப்படி இருக்கிறது என்பதையும் கூட சிலர் தேடியிருக்கிறார்கள். 

உலக அளவில் மக்கள் காலா குறித்து என்ன அறிந்து கொள்ள் முயன்றிருக்கிறார்கள் என பார்த்த போது, அதிலும் கூட மக்கள் காலா ரிவியூவ் (Kaala Review), காபாலி ரிவியூவ் (Kabali Review) என தேடியிருக்கிறார்கள். சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் காலா குறித்த தேடுதல் அதிகம் பதிவாகியுள்ளது. உலக அளவிலான காலா குறித்த தேடுதலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்தான். 

சரி, தமிழர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்களே , இப்போது காலா படம் குறித்து என்ன வித்தியாசமாக தேடி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள கூகுளை தட்டினால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் பதிலாக கிடைத்தது. ஆம், காலா மூவி டவுன்லோட் (Kaala Movie Download) என்பதைதான் அதிகமான நபர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டுமென நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் சூழலில், காலா படத்தை டவுன்லோட் செய்து பார்க்க பலருக்கும் எண்ணம் இருப்பது தெரிய வந்துள்ளது. 

குறிப்பு : திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்பது பல கலைஞர்களின் உழைப்புக்கு கொடுக்கப்படும் மரியாதை. புதிய படங்களை ஆன்லைனில் , திருட்டு விசிடியில் பார்ப்பது சரியான ஒன்றல்ல 

POST COMMENTS VIEW COMMENTS