ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்!


ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

உலகின் முக்கிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஆப்பிள், பல்வேறு விலைகளில் அதிக மாடல்களில் ஐபோனை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் செப்டம்பர் 16-ம் தேதி பத்திரிகையாளர்களை அழைத்துள்ளது. அன்று, வித்தியாசமான வண்ணங்களிலும் வகைகளிலும் உருவாகியுள்ள மூன்று புதிய ஐபோன்க ளையும் புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐபேட் டேப்ளட்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

புதிதாக அறிமுகமாகும் இந்த ஐபோன்களில் 6.5 இன்ச் டிஸ்பிளேவுடன், முக அடையாளம், செயற்கை நுண்ணறிவு வசதிகள் வழங்கப்பட்டு  ள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகிய‌ ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது.

POST COMMENTS VIEW COMMENTS