விற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்


ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் 2 இன்று விற்பனைக்கு வந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் 41வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மகளுமான ஈஷா அம்பானி, தங்கள் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார். ஏற்கனவே ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.1,500 கட்டணத்தில் சில சலுகைகளுடன் ஒரு போன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ போன் 2 என பெயரிடப்பட்டது.

அத்துடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அறிவித்தபடியா ஜியோ போன் 2 இன்று முதல் விற்பனைக்கு வந்தது. நாளை முதல் இது இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதில் ஜியோ போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே (KaiOS) ஆப்ரேடிங் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் மைக்ரோ சிப் மூலம் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை இணைக்க முடியும். 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 எம்.பி பின்புறம் கேமரா உள்ளது. அத்துடம் 2 எம்.பி விஜிஏ செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து அப்ஸ்களையும் பயன்படுத்த முடியும்.    
 

POST COMMENTS VIEW COMMENTS