சியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் வெளியீடு


சியோமி நிறுவனம் தனது துணை பிராண்டான பொகொவுடன் இணைந்து புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது.

பொகொ எஃப்1 என்ற அந்தப் புதிய ஸ்மார்ட்போன் வரும் 22ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் என்பதால் இதற்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ரகங்களில் வெளியாகியது. 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வெளிவருகிறது. இதில் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் ரகத்தின் விலை ரூ.33,300 என்றும், 128 ஜிபி ரகத்தின் விலை ரூ.36,400 என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் அளவிலான ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 12 எம்பி இரட்டைக் கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 4000 எம்ஏஎச் திறன்கொண்ட பேட்டரி உள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS