இனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு


ஐ-போனுடன் ஹெட்போன்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப ஜாம்பவனான ஆப்பிள் ஐ-போன் நிறுவனம் இந்தாண்டு ஐஃபோன் 8, ஐஃபோன் 8 பிளஸ், ஐஃபோன் எக்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களுடன் 3.5 மில்லி மீட்டர் அளவில் ஹெட்போன்களும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி அவை போன்களுடன் சேர்ந்து தரப்படாது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

WIRELESS AIRPODS தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளதால் இந்த புதிய முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. ஒரு ஹெட்போனின் விலை இரண்டாயிரத்து 300 ரூபாய் முதல் விற்பனையாவதால் அவற்றை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS