வாட்ஸ் அப்பில் வெளியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்


ஃபேஸ்புக் விளம்பரங்களை வாட்ஸ் அப்பில் பகிர அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்றவை உலக அளவில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர் எனக் கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியாவில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்துகின்றது. 

வாட்ஸ் அப் கண்டுபிடிக்கப்பட்டது 2009ஆம் ஆண்டு. ஜான் கோம் மற்றும் ப்ரைன் அக்டான் என்ற இரு அமெரிக்கர்கள் இணைந்து வாட்ஸ் அப்பை கண்டுபிடித்தனர். இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஆண்டாராய்ட், ஐபோன், விண்டோவ்ஸ் போன் உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். சில நாடுகளில் மட்டும் இந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பை 2014 பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு வாட்ஸ் அப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்பிறகு தொடர்ச்சியாக பயன்பாட்டாளர்களின் வசதிக்கேற்ப பல அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக் விளம்பரங்களை வாட்ஸ் அப்பில் கொண்டுவர, ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விளம்பரங்கள் உங்கள் சேட்டிங் பகுதியில் இடம் பெறும். இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் உங்களுக்கு பணம் வழங்கப்படும். முதற்கட்டமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், விஷ், ஊபர் உள்ளிட்ட 100 நிறுவனங்களின் விளம்பரத்தை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விளம்பரங்களை வருவதை வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களால் தவிர்க்க இயலாது. 

POST COMMENTS VIEW COMMENTS