விண்ணைத்தொட்டவர் விடைபெறுகிறார் !


இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி ஓய்வுப் பெறுகிறார். 

கடந்த 36 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை 2005 ஆம் ஆண்டு முதல் அம்மையத்தின் இயக்குநராக உள்ளார். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., ஜிசாட், ஆஸ்ட்ரோசாட், கார்ட்டோசாட், இன்சாட் வரிசையில் 30 செயற்கைக்கோள்களை வடிவமைத்து செலுத்தும் பணியில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். 

கோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தில் ‌1958 ஆம் ஆண்டு பிறந்த மயில்சாமி அண்ணாதுரை 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் மற்றும் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் ஒன்று ஆகிய திட்டங்களின் இயக்குநராகவும் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பு வகித்துள்ளார். தனது அறிவியல் பணிகள் மற்றும் சாதனைகளுக்காக 75 விருதுகளையும் மயில்சாமி அண்ணாதுரை பெற்றுள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS