வெளியானது மோட்டோ இ5 ப்ளஸ் : நீடித்து நிற்கும் பேட்டரி!


பிரபல செல்போன் நிறுவனமான மோட்டோ, இந்தியாவில் மோட்டோ இ5 மற்றும் இ5 ப்ளஸ் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

இந்தியச் சந்தைகளில் நாளுக்கு நாள் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மோட்டோ நிறுவனம் இ5 மற்றும் இ5 ப்ளஸ் என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. தற்போது வெளிவரும் போன்கள் அனைத்தும் டெக்னாலஜி வசதிகளில் ஒன்றுக்கு ஒன்று போட்டிக்கொண்டு வருகின்றன. ஆனால் அந்த மொபைல்களின் பேட்டரிகள் வாடிக்கையாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுகின்றன. இதனால் பேட்டரியில் நீண்டு நிற்கும் செல்போன்களுக்கு இந்தச் சந்தையில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் விலையும் மலிவான போன்களே அதிக விற்பனை அடைகின்றனர். இந்த இரண்டு அடிப்படைகளையும் கொண்ட வகையில் தற்போது மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 ப்ளஸ் வெளியாகியுள்ளது.

மோட்டோ இ5 ப்ளஸின் விலை ரூ.11,999 ஆகும். இது தற்போது ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு உள்ளது. நாளை முதல் அனைத்து செல்போன் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவுடன் வெளியாகியுள்ள இதில், 6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகள் பொருத்த முடியும். 3 ஜிபி ரேம் உடன், 1.4 ஜிஹெச்ஸி ப்ராசெஸர் இணைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜும், கூடுதலாக 128 ஜிபி மைக்ரோ கார்டும் இந்த ஸ்மார்ட்போனில் இணைக்க இயலும். இதன் பின்புறத்தில் 12 எம்.பி கேமராவும், முன்புறம் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்.ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

மோட்டோ இ5-ன் விலை ரூ.9,999 ஆகும். இதில் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மற்றும் 5.7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 128 ஜிபி மைக்ரோ கார்டு பொருத்த முடியும். பின்புறம் 13 எம்.பி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4000 எம்.ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 
 

POST COMMENTS VIEW COMMENTS