யமஹா எராக்ஸ் 155 : அதிகரிக்கும் எதிர்பார்ப்பு


யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் கியர் பைக்குகளை விட, ஸ்கூட்டர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் ஸ்கூட்டர்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். ஹோண்டா, யமஹா உள்ளிட்ட பல கம்பெனிகளின் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் நல்ல விற்பனை பெற்று வருகிறது. அதிலும் ஸ்டைலான ஸ்கூட்டர்கள் என்றால் அதற்கு தனி டிமாண்ட். அந்த வகையில் யமஹா நிறுவனத்தின் புதிய ரக ஸ்கூட்டரான எராக்ஸ் மாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இது தற்போது இந்தியாவில் வெளியிடப்படவில்லை. ஒரு சில வெளிநாடுகளில் மட்டும் வெளியாகியுள்ளது. 155 சிசி கொண்ட இந்த ஸ்கூட்டர், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது இந்தியாவில் வெளியிடப்படலாம் எனக்கூறப்படுகிறது. ஒரு சில யமஹா ஷோரூம்களின் மூலம் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.  

POST COMMENTS VIEW COMMENTS