விரைவில் வாட்ஸப்பில் படம் மட்டுமல்ல பணமும் அனுப்பலாம் !


பிரபல சமூக வலைத்தளமான வாட்சப்பின் பணப்பட்டுவாடா சேவை இன்னும் சில வாரங்களில்அதிகாரபூர்வமாக தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்சப் நிருவனம் தற்போது பணம் அனுப்பும் சேவையை சோதனை ரீதியில் செயல்படுத்தி வருகிறது. 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாட்சப் மூலம் பணம் அனுப்புவது எளிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அதை பயன்படுத்தி வருபவர்கள் தெரிவிப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய அரசு, தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனம், பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பட்டுவாடா சேவையை வாட்சப் வழங்க உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்சப்பின் பணப்பட்டுவாடா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் வாட்சப் வழங்க உள்ள புதிய சேவை ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என ஆராயுமாறு தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனத்தை மத்திய அரசு பணித்துள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS