வாட்ஸ்அப் தடைக்கு மத்திய அரசு பரிசீலனை


வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செல்போன்களில் முதன்மையாக ஆக்கிரமித்திருப்பது வாட்ஸ்அப் தான். மெசேஜ், ஆடியோ கால், வீடியோ கால் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்கம் பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நேரத்தில் பயங்கரவாதிகள் தங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கூட்டாளிகளுக்கு வாட்ஸ் அப் மூலமே தெரிவித்தது தற்போது அம்பலமாகியுள்ளது. பயங்கரவாத செயல்களின்போது அவர்கள் வாட்ஸ் அப் செயலியையே அதிகம் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது சமூக வலைத்தளங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளது. பயங்கரவாத செயல்களை மட்டும் கருதாமல், மதவாத பிரச்னை குறித்து வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் வதந்தி குறித்தும் கவனித்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம் சமூக வலைத்தளங்கில் குற்றவியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கடுமையான ஐடி சட்டங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS