நோக்கியா 7 ப்ளஸ் : இரண்டு சிம்மிலும் "வோல்ட்" வசதியா!


நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் விரைவில் இரண்டு சிம்மிலும் வோல்ட் வசதி கொண்டு வரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ‘நோக்கியா 7 ப்ளஸ்’ கடந்த 30ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதற்கான முன்பதிவு கடந்த 20ஆம் தேதி முதலே தொடங்கிவிட்டது. இந்த போனில் பின்புறம் 12 எம்பி மற்றும் 13 எம்பி இரட்டைக் கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் புகைப்படங்களை துல்லியமாக எடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 6 இன்ச் டிஸ்ப்ளேவுடன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது. இதன் பேட்டரி திறன் 3,800 எம்ஏஎச் ஆகும். 

இந்த போன் தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நோக்கியா 7 ப்ளஸில் இரண்டு சிம்களிலும் விரைவில் வோல்ட் வசதி அப்டேட் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். தற்போது இது 25,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

POST COMMENTS VIEW COMMENTS