நேத்து உங்க நிழல பாத்தீங்களா ? சூரியனின் அதிசய நிகழ்வு !


சூரியன் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நேரடியாக மேல்நோக்கி செங்குத்தாக வரும்போது, (மிக உயர்ந்த புள்ளி) அதன் மேற்பரப்பில் சரியாக ஒரு குறிப்பிட்ட புள்ளியைத் தாக்கும், அப்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். இது நடக்கும்போதும் உங்கள் நிழல்கள் இல்லை என தோன்றும், இல்லை...! உங்கள் நிழல் உங்களுக்கு கீழ் இருக்கும், அதனை சின்னதாக நீங்கள் குதித்தால் நிழலை பார்க்க முடியும். அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சூரியன் சரியாக தலைக்கு மேல் செங்குத்தாக நாள்தோறும் வருவதில்லை. இது, ஒரு வருடத்திற்கு சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு முறையும், தென் நகர்வு நாள்களில் ஒரு முறையும், ஆக இரண்டு முறை மட்டுமே வரும். இந்த நிகழ்வு எல்லா இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அதன் இடத்திற்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் தீர்க்க ரேகைக்கு ஏற்றவாறு நிகழும். இந்த நிகழ்வை சரியாகப் புரிந்துகொள்வதற்கு பூகோள நிழலியல் சங்கத்திலிருந்து இந்தியாவின் பூகோள நிழல் நாள் பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்க வேண்டும்.

இதன்படி சென்னையில் நேற்று நிழல் இல்லா நாளை மாணவர்கள், நிழல் பூஜ்ஜியமாகும் நிகழ்வை பகல் 12.07 மணிக்கு கண்டு ரசித்தனர். பள்ளி மாணவர்கள் இந்த அதிசய நிகழ்வை பரிசோதித்து பார்த்ததோடு அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளையும் கண் கூடாக உணர்ந்தனர். மேலும் இந்த நிகழ்வு ஆக்ஸ்ட் 18ம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS